‘அவர்கள்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர்
ரவிக்குமார் (71 வயது) சென்னையில் காலமானார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்த அவர், ‘உல்லாச யாத்ரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ்ப் படங்களில் நாயகனாக நடித்த அவர், பின்னாள்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தினார்.
பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் ரவிக்குமாரைக் காண இயலும்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தன் தந்தை காலமானதாக ரவிக்குமாரின் மகன் தெரிவித்தார்.

