தமிழக அரசு செயல்படுத்தி உள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் இந்தி நடிகை சமீரா ரெட்டி.
இத்திட்டம் பல உயிர்களைக் காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘அலோபெசியா அரேடா’ (Alopecia Areata) என்ற நோய் பாதிப்பால் அவதிப்பட்டார் சமீரா. அதன் பிறகுதான் தனது உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்படத் தொடங்கியதாக ஒரு காணொளிப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில்கூட பெரும்பாலான பெண்கள், பாதிப்புகள் அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
“ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1,256 பன்நோக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதை அறிந்தேன்.
“இது மிகவும் பாராட்டத்தக்க செயல்,” என்று சமீரா ரெட்டி தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.
சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்திருந்தார் சமீரா ரெட்டி.

