கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் மணிகண்டன் நடிப்பில், இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘மக்கள் காவலன்’. அதன் முதல் பாடல் தற்போது வெளியீடு கண்டுள்ளது.
கிராமியப் பின்னணியில் ‘ராப்’ வகைப் பாடலாக உருவாகியுள்ள அதற்கு, ‘இக்னோர் சாங்’ (Ignore song) எனத் தலைப்பிட்டுள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எம்.கே. பாலாஜி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ராப் பாடகர் யோகி பி, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்து நடிகை அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் பாடகியாக அசத்தியுள்ளார். நாட்டுப்புறப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள அப்பாடலின் காணொளிக் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
இப்படத்தில் மணிகண்டன் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாகக் களமிறங்குகிறார். இதற்கு முன்பு 2017ல் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் காவலராக நடித்திருந்த இவர், தற்போது அதிரடி ‘ஆக்ஷன்’ நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபாதா, சாபுமோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிதி சங்கரின் உற்சாகமான குரலில் உருவாகியுள்ள இப்பாடல், படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ‘மக்கள் காவலன்’ படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.
