அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
படம் வெளியாக சில நாள்களே உள்ள நிலையில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏறக்குறைய 800 முதல் 1,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகக் கூடும் என படத் தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் கதை, காட்சி அமைப்பு என எல்லாமே சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பொதுவாக தணிக்கைக் குழுவினர் ஒருசில படங்களுக்கு மட்டுமே இவ்வாறு பாராட்டுத் தெரிவிப்பார்கள் என்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.