நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மாதவனும் நடிகை கங்கனா ரணாவத்தும் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளனர். இதை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். படத்துக்கு ‘லைட்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கடைசியாக அருண் விஜய், எமி ஜாக்சன் இணைந்து நடித்த ‘மிஷன் சாப்டர் 1’ என்ற படத்தை இயக்கியிருந்தார் விஜய்.
மாதவன், கங்கனா ஆகிய இருவரும் ஏற்கெனவே ‘தனு வெட்ஸ் மனோ’ என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மீண்டும் தமிழில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறாராம் மாதவன்.


