தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திறமைக்கு வயது தடையன்று: காஜல் அகர்வால்

1 mins read
e523a89f-e2f4-4831-8195-7056a9f67d21
காஜல் அகர்வால். - படம்: ஊடகம்

வர்த்தகர் கவுதம் கிச்லு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் நடிகை காஜல் அகர்வால்.

இவரது நடிப்பில் அண்மையில் ‘கண்ணப்பா’ படம் வெளியானது. தற்போது, ‘ராமாயணா’ படத்தில் மண்டோதரியாக நடிக்கிறார்.

திரையுலகில் மீண்டும் முன்னணியில் வலம்வர காத்திருக்கும் அவரிடம், “40 வயதைக் கடந்த நிலையில் மீண்டும் திரையுலகில் சாதிக்க நினைப்பதற்கு வாழ்த்துகள்,” என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

அதைக் கேட்ட காஜல், “40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. திறமைக்கு வயது தடையன்று. இனி அப்படி யாரிடமும் கேட்காதீர்,” எனக் போபம்கொண்டாராம்.

குறிப்புச் சொற்கள்