தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற அஜித் நிறுவனம்

2 mins read
992b69e1-db21-406b-857d-f7a5c2ba841f
சாதனை முயற்சியை மேற்கொண்ட அஜித் நிறுவனக் குழு. - படம்: ஊடகம்

நடிகர் அஜித்தின் ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் அந்தமானில் நடைபெற்ற ‘ஹார்ட்லி டேவிட்சன் ரைட்’ என்ற நிகழ்வில் அஜித்தின் நிறுவனம் பங்கேற்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தனது தொழில்முறை ரேசிங் அணியை அறிமுகப்படுத்தி இருந்தார் அஜித். வீனஸ் நிறுவனம் ஓராண்டுக்கு முன்புதான் நிறுவப்பட்டது.

இந்நிலையில், அந்தமானில் நடைபெற்ற ‘ஐலேண்ட் ரம்பிள்’ என்ற நிகழ்வில் பங்கேற்ற வீரர்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, அத்தீவை வலம் வந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப் பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இதுகுறித்த மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அஜித் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்னாம், தாய்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற பல்வேறு நாடுகளில் அஜித்தின் நிறுவனம் சிறந்த வீரர்களுடன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயணங்களின்போது வீரர்களுக்குச் சிறந்த அனுபவங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகக் கூறுகிறார் அஜித்.

“வீரர்கள் இதுவரை பார்க்காத இடங்கள், அழகான இயற்கைக் காட்சிகள் எனப் பலவற்றைக் கண்டு ரசிக்க இயலும். மேலும், மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாமல் கூடுதலாக கார், சைக்கிள் பயணங்களிலும் தங்கள் நிறுவனம் பங்கேற்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ள அவர், அனைவருக்கும் சாகச நிகழ்வுகளில் பங்கேற்ற மனநிறைவு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் சென்றுள்ளார் அஜித். இம்முறை மனைவி ஷாலினியும் மகன் ஆத்விக்கும் அவருடன் சேர்ந்து சென்றுள்ளனர்.

அங்கு நடைபெற்ற கார் பந்தயப் போட்டியை மகனுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அஜித்.

இந்நிலையில், ஷாலினியும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், அஜித்தும் ஷாலினியும் ஸ்பெயின் சாலைகளில் இயல்பாகப் பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் தமது பதிவில், “காதலருடன் இருப்பதற்கு இது ஓர் அற்புதமான இடம்” எனக் குறிப்பிட்டுள்ளார் ஷாலினி.

அஜித் ரசிகர்கள் இந்தக் காணொளியைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்