தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்தும் வாழ்வின் ஓர் அங்கம் தான்: விஜய் ஆண்டனி

2 mins read
c8ee67d8-44e3-43c8-a40d-5169d82277d3
விஜய் ஆண்டனி. - படம்: ஊடகம்

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று வெளியீடு காணும் தனது ‘ஹிட்லர்’ படத்தை விளம்பரப்படுத்துவதில் மிகவும் மும்முரமாக உள்ளார். 

இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவ்வாண்டு வெளியீடு காணும் விஜய் ஆண்டனியின் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

இந்நிலையில், ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகிச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் 4 நிமிடக் காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், மலைப்பகுதிகளில் வேலை செய்துவிட்டு பெண்கள் இரவில் ஆற்றைக்கடந்து செல்லும் போது வெள்ளம் அதிகமாகி அவர்கள் அதில் சிக்கிக்கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், இப்படத்தில் விறுவிறுப்புக்குக் குறையிருக்காது என்றும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்றும் இப்படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

இதற்கிடையே, தன் மூத்த மகளின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் விஜய் ஆண்டனி. அண்மையில், ‘இந்தியா டுடே’ சஞ்சிகைக்கு இவர் அளித்த நேர்காணலில் தனது மகளின் இழப்பு குறித்தும் தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும் பேசியுள்ளார்.

“எதுவும் கடினமாக இல்லை. இங்கே எல்லாமே நம் வாழ்வின் ஒரு பகுதி தான். சிறு வயதிலிருந்தே எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை,” என்றார் விஜய் ஆண்டனி.

தனது அறையில் விஜய் ஆண்டனியின் மகள் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விஜய் ஆண்டனி மகளான மீராவின் திடீர் மரணம் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

மேலும் பட விளம்பரங்களின் போது காலணி அணிவதைத் தவிர்ப்பது ஏன் என்பதைப் பற்றியும் வெளிப்படையாக அவர் கூறினார்.

“காலணிகள் அணியாதது தான் எனக்கு மிகவும் ஆடம்பரமாகத் தெரிகிறது. நீங்கள் காலணிகளை அணிந்திருக்கிறீர்கள் என்றால் இது போன்ற விஷயங்களால் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

“எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் கண்டிப்பாக நான் காலணி அணிவேன். நாங்கள் காட்டில் ஒரு படப்பிடிப்பு நடத்தினோம், அங்குப் பல பூச்சிகளும் கூர்மையான பல பொருள்களும் இருந்தன. அப்போது, நான் காலணி அணிந்திருந்தேன்.

“இலங்கையில் நடந்த எனது நேரடி இசை நிகழ்ச்சிக்கு, எல்லா இடங்களிலும் மின்சாரக் கம்பிகள் இருந்ததால் நான் காலணி அணிந்தேன். தேவைப்படும் போது அவற்றை நான் அணிகிறேன். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நான் வெறுங்காலுடன் தான் நடக்கிறேன்,” என்றார் விஜய் ஆண்டனி. 

குறிப்புச் சொற்கள்