தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி: இளையராஜா

1 mins read
9e120451-5863-437b-987f-d10bcce01016
இளையராஜா. - படம்: ஊடகம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகக் கூறியுள்ளார் இளையராஜா.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற தனது நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“கும்பகோணத்தில் கொட்டும் மழையிலும் எனது நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்ததை மறக்க இயலாது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி. இனி என் இசைப்பயணம் தலைநகர் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்,” எனக் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்றும் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்