அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்

1 mins read
e1709be1-d5a3-4b14-832d-cb7af2efc1e7
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அட்லீ இப்படத்தை இயக்குகிறார். - படங்கள்: இணையம்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்துக்கு ஹாலிவுட் நிறுவனங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது.

‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இப்படத்தை இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு காணொளிப் பதிவொன்று வெளியிடப்பட்டது.

அதில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுடன் அட்லீ – அல்லு அர்ஜுன் இருவரும் பேசுவது, பின்பு அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட் நிறுவனக் கலைஞர்களுடன் உரையாடுவது என 2:34 நிமிட காணொளியை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் காணொளி பதிவின் மூலம் உலகத் தரத்தில் பிரம்மாண்டமான படத்தை இருவரும் இணைந்து உருவாக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பகக் கலைஞர்கள் யார் என்ற விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்தக் காணொளிப் பதிவுக்கு சாய் அபயங்கர் தான் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆனால், படத்துக்கு இசை யார் என்பது விரைவில் தெரியவரும்.

ராஜமவுலி இயக்கிவரும் படத்துக்குப் பிறகு, இப்படம்தான் இந்திய அளவில் அதிகப் பொருட்செலவில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்காக அல்லு அர்ஜுன் – அட்லீ இருவருக்குமே மிகப் பெரிய சம்பளத்தைக் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்