‘புஷ்பா-2’ படத்தில் பெண் வேடத்தில் நடிக்கத் தாம் தயங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன்.
‘புஷ்பா-2’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் புடவை அணிந்து நடிக்க வேண்டுமென இயக்குநர் சுகுமார் கூறியபோது, தாம் பயந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அதன் பிறகு அந்தக் கதாபாத்திரத்தை என் மனதில் உள்வாங்கி ஒருவித துணிச்சலை நானே வரவழைத்துக்கொண்டு அப்பாடலில் நடித்தேன்.
“அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது,” என அல்லு அர்ஜுன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘புஷ்பா’ முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.500 கோடி வசூல் கண்டது.
‘புஷ்பா 2’ படம் ரூ.500 கோடிக்கு தயாரிக்கப்பட்டு ரூ.1,800 கோடி வசூலை அள்ளியது.