இந்திப் படம் இயக்கும் ‘அமரன்’ இயக்குநர்

1 mins read
c1d73f95-ba59-4d38-b155-3f78a9043375
தனுஷுடன் ராஜ்குமார் பெரியசாமி. - படம்: ஊடகம்

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து தனுஷின் 55வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதைக் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘டி.சீரிஸ்’ தயாரிக்கும் புதிய படத்தின் இயக்குநராக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பூஷன் குமார் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே ‘அத்ராங்கி ரே’, ‘அனிமல்’, ‘கபீர்சிங்’, ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.

முன்னதாக, சோனி நிறுவனம் தயாரிக்கும் படத்தை ராஜ்குமார் இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

குறிப்புச் சொற்கள்