தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து சமையலைக் கற்றுக்கொண்ட ஆண்ட்ரியா

1 mins read
5e533aa2-409c-4fa5-80e5-4af40c5527f9
ஆண்ட்ரியா. - படம்: ஊடகம்

ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருப்பார் போலிருக்கிறது ஆண்ட்ரியா.

இந்நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலர் தமக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் புலம்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபட அண்மையில் தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு சென்று பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதுதான் ஆண்ட்ரியாவின் திட்டம் எனப் பல ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்க, ஆண்ட்ரியாவோ தாய்லாந்தில் உள்ள சாதாரண தங்குவிடுதிகளில் சில நாள்கள் தங்கியிருந்து ஒவ்வொரு வீதியாகச் சுற்றிவந்துள்ளார். ஆனால் எதுவும் சுற்றுலாவுக்காகப் பெயர்பெற்ற இடமல்ல.

அந்த வீதிகளில் உள்ள சிறுசிறு உணவகங்களுக்குச் சென்று தாய்லாந்தில் உள்ள அனைத்துவிதமான உணவு வகைகளையும் ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாராம்.

அதுமட்டுமல்ல, சாலையோர உணவகங்களை நடத்தும் பல பெண்களிடம் உள்ளூர் சமையல் குறிப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார்.

நாடு திரும்பியதும் சில நாள்களுக்கு, தனது நண்பர்களை அழைத்து விதவிதமான தாய்லாந்து உணவுகளைச் சமைத்து பரிமாறி பாராட்டுகளைப் பெறத் தவறவில்லை ஆண்ட்ரியா.

குறிப்புச் சொற்கள்