செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (ஏஐ) தாம் பயன்படுத்தியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
மேலும், ‘சாட் ஜிபிடி’யை பணம் செலுத்தி தாம் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இரண்டு நாள்களுக்கு முன்புகூட ஒரு முழுப் பாடலையும் பதிவிட்டு இரண்டு வரிகள் வேண்டும் எனக் கேட்டேன். ‘சாட் ஜிபிடி ஏஐ’ பத்து வரிகளைக் கொடுத்தது.
“சில நேரங்களில் நாம் நினைப்பது போன்ற படைப்புகள் சரியாக இல்லாமல் போகலாம். அதனால் நமக்குப் படைப்பாற்றல் இல்லை எனக் கருதக்கூடாது,” என்று கூறியுள்ளார் அனிருத்.