தென்னிந்திய திரையுலகில் இப்போது திரும்பிய இடமெல்லாம் அனிருத் ஆதிக்கம்தான். தமிழைவிட தெலுங்கில் அவருக்கு அதிக வாய்ப்புகள் தேடி வருகின்றன.
நடிகர் நானியின் ‘கேங் லீடர்’, ‘ஜெர்சி’ பட வெற்றிகளுக்குப் பிறகு அவருக்கு அனிருத் இசைதான் மிகவும் பிடித்திருக்கிறதாம்.
அதனால் தாம் நடிக்கும் படங்களுக்கு அனிருத் இசைதான் பொருத்தமாக இருக்கும் என இயக்குநர்களிடம் பரிந்துரைப்பதாகத் தகவல்.
ஆனால் அனிருத் தரப்போ, சங்கடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இசைப் பணிகளைக் கவனிக்க 24 மணி நேரம் போதாமல், ஒவ்வொரு நாளும் ஒலிப்பதிவுக்கூடமே கதி என்று கிடக்கிறாராம் அனிருத்.
போதாத குறைக்கு வெளிநாடுகளில் உள்ள ஏராளமான ரசிகர்கள் வேறு, இசை நிகழ்ச்சிகளை நடத்த வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்களாம்.

