சாய் பல்லவி திறமையான நடிகைகளில் ஒருவர் என்று மூத்த இந்தி நடிகர் அனுபம் கெர் பாராட்டியுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் 56வது அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட சாய் பல்லவியும் அனுபம் கெரும் சந்தித்துள்ளனர்.
அப்போது எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’யை அனுபம் கெர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் அனுபம் கெர்.

