நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இந்த ஆண்டு மிகவும் ராசியான ஆண்டாக இருக்குமாம். இதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
காரணம், மலையாளத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழிலும் அதே எண்ணிக்கையில் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
அவற்றுள் ‘டிராகன்’ படம் விரைவில் திரை காண உள்ளது. அதையடுத்து, ‘லாக் டவுன்’ படம் வெளியாகுமாம்.
இவை தவிர, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘பைசன்’ (‘காளமாடன்’) படத்திலும் நடிக்கிறார் அனுபமா.