பாலிவுட்டை விட்டு விலகிய அனுராக் காஷ்யப்

1 mins read
54af72fd-3790-45f4-8223-4cd9db7f9475
அனுராக் காஷ்யப். - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதாகவும் அங்கிருந்து தாம் விலகுவதாகவும் அறிவித்துள்ளார் அனுராக் காஷ்யப்.

இந்தியில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம்வந்த இவர், ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’, ‘மகாராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தித் திரையுலகத்தை விட்டு தூர விலகியிருக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

“பாலிவுட் இயக்குநர்கள் ரூ.500 கோடிக்கு குறைந்த செலவில் படங்களை இயக்குவதில்லை.

“தென்னிந்திய இயக்குநர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது. அவர்களுடைய படங்களில் உள்ள நல்ல அம்சங்களில் சிலவற்றைக்கூட சோதனை முயற்சியாக என்னால் பாலிவுட்டில் செய்ய முடியவில்லை. எனவேதான் அங்கிருந்து விலகுகிறேன்,” என்று கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.

குறிப்புச் சொற்கள்