அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லட்சுமணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
“விஜய் ஆண்டனி நாயகனாக மட்டுமன்றி, எடிட்டர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் ஆகிய பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்துள்ளார்.
“அவரது திரையுலக வாழ்க்கையில் இது மிக முக்கியமான படமாக இருக்கும். பேபி லிதன்யாவின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்,” என்று இயக்குநர் மாறன் கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு தீபாவளிக்கு சூர்யா நடித்துள்ள ‘சீன்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ படங்கள் வெளியாகவுள்ளன. ரன்பீர் கபூர்-சாய் பல்லவி நடித்துள்ள ‘ராமாயணா’ இந்திப் படமும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
சூர்யாவின் முந்தைய படங்கள் நல்ல வசூலைத் தந்ததால், திரையரங்குகள் ‘சீன்’ படத்தை முன்னிலைப்படுத்துகின்றன. ‘அப்பா குட்டி’ படம் தனியாக வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என விஜய் ஆண்டனிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனை ஏற்றுக்கொண்டு, படத்தின் வெளியீட்டுத் தேதியை விஜய் ஆண்டனி வேறு தேதிக்குத் தள்ளிவைக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
