எனது வெற்றிக்கு தமிழ் மொழியும் துணை நின்றது: சொந்த வீடு கட்டிய அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சி

2 mins read
7cdb65de-6724-4157-9654-76fd329c82d2
அறந்தாங்கி நிஷா. - படம்: ஊடகம்
புதுமனை புகுவிழாவின்போது அறந்தாங்கி நிஷா.
புதுமனை புகுவிழாவின்போது அறந்தாங்கி நிஷா. - படம்: ஊடகம்

தன்னுடைய வெற்றிக்கு எப்போதுமே தனது குடும்பம், நண்பர்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியும் துணை நின்றதாகச் சொல்கிறார் சின்னத்திரை கலைஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான அறந்தாங்கி நிஷா.

எங்கு தோல்வியை எதிர்கொள்கிறோமோ, அங்குதான் வெற்றிபெற வேண்டும் என்பதே தமது கொள்கை என்று சொல்லும் இவர், சென்னையில் சொந்த வீடு வாங்கி புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் சின்னத்திரையும் தனுஷின் ‘மாரி-2’ படம் மூலம் திரைத்துறையும் எனக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் தளங்களாக அமைந்தன.

“நிஷாவை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மேலும் பரவலாக அறிமுகப்படுத்திய நிலையில், சொந்த வீடு வாங்கியது குறித்து சமூக ஊடகத்தில், ஒரு நீண்ட பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.

“வீட்டுக்கு அப்பாவின் பெயரைச் சூட்டியுள்ளோம். எனக்கு சென்னையில் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது.

“சிறு வயதில் என்னை ஒரு முறைதான் அப்பா சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு வர முடியாமல் போய்விட்டது.

“மீண்டும் சென்னையில் குடியேற என் தந்தையும் தமிழ் மொழி மீதான பற்றும்தான் காரணம்.

“தொடக்கத்தில் ஆறு மாதங்கள் வாடகைக்குச் சென்னையில் வீடு தேடியபோது சினிமா, தொலைக்காட்சி நடிகை என்றால் வீடு தர மறுத்தனர். அப்போதுதான், குடும்பமாகச் சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்க முடிவு எடுத்து, இப்போது வாங்கியும் விட்டோம்.

“இன்று சொந்த வீடு கட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளேன் என்றால் அதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியும் முக்கியமான காரணம்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

குறிப்புச் சொற்கள்