இசையமைப்பாளர் தமனுக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விலை உயர் ரக காரை பரிசளித்துள்ளார்.
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா’, ‘வீரசிம்மாரெட்டி’, ‘டாகு மகாராஜ்’ உள்ளிட்ட தெலுங்குப் படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது ‘அகண்டா-2’ படத்துக்கும் அவர்தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், தனது படங்களுக்குத் தொடர்ந்து அதிரடி இசையை வழங்கியதற்காக தமனைப் பாராட்டும் வகையில் அவருக்கு விலை மதிப்புள்ள ‘போர்சே’ காரை பரிசளித்துள்ளார் பாலகிருஷ்ணா.
தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைக்கும் தமன் தற்போது ‘இதயம் முரளி’ என்ற படத்துக்கு இசையமைத்து, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இவரது இசையில் அடுத்து வெளியாகும் தமிழ் படம் ‘சப்தம்’.