‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணா

1 mins read
38799472-9879-4965-9f6f-756e4d97214e
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா (இடது), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. அப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தில் இரண்டாம் பாகத்தைப் படமாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அண்மையில், அப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்நிலையில், ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறுசில முக்கிய கதாபாத்திரங்களையும் அப்படத்தில் இயக்குநர் நெல்சன் உருவாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பாலகிருஷ்ணாவும் ‘ஜெயிலர் - 2’ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில், ரஜினி - சிவராஜ்குமார் காட்சிகள் பேசப்பட்டது போல், இதில் ரஜினி - பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்