தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்படம் குறித்து அறிவிக்காத பாக்யஸ்ரீ போர்ஸ்

1 mins read
73a46022-f61e-43dc-b6d6-98abe39298cc
பாக்யஸ்ரீ போர்ஸ். - படம்: ஊடகம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்.

இவர் தற்போது கவுதம் தின்னனுரி இயக்கும் ‘கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நாயகியாக இணைந்துள்ளார்.

பாக்யஸ்ரீக்கு தெலுங்கு தேசத்தில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், ‘கிங்டம்’ படத்தில் அவர் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லையாம்.

இத்தனைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாகத் தகவல்.

பாக்யஸ்ரீயும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் ‘கிங்டம்’ குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இப்படக்குழு அடுத்த படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளது. அங்கு இரண்டு காதல் பாடல்கள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது. இப்படம் வரும் மே மாதம் 30ஆம் தேதி வெளியாகுமாம்.

குறிப்புச் சொற்கள்