‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஆயிஷா பல சின்ன திரைத் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ‘உப்பு புளி காரம்’ என்ற இணையத் தொடரிலும் இவரது பங்களிப்பு இருந்தது.
இந்நிலையில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத புதுப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாராம் ஆயிஷா. அறிமுக இயக்குநர் ஜாஃபர் இயக்கும் இப்படத்தில் கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்க சி.சத்யா இசையமைக்கிறார்.
கல்லூரிப் படிப்பை முடித்த காதலர்கள் திடீரென பிரிய நேரிடுகிறது. பிறகு வேறு ஒருவருடன் திருமணமாகி வாழ்ந்து வரும் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அந்தச் சந்திப்பு நடக்குமிடம் ஒரு சிறிய அறை. மேலும் அந்த அறையின் கதவு திடீரென பூட்டிக் கொள்கிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.
இது திகிலும் நகைச்சுவையும் கொண்ட படமாக உருவாகிறது என்கிறார் இயக்குநர் ஜாஃபர்.

