வாடகை வீட்டில் வசிக்கும் கோடீஸ்வர நடிகர்

1 mins read
98cb67af-7dc4-4cca-9f6e-d3b348b726cf
அனுபம் கெர். - படம்: ஊடகம்

540 திரைப்படங்களில் நடித்து, 400 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ள இந்தியத் திரையுலகின் மூத்த நடிகர் ஒருவர் இன்றுவரை வாடகை வீட்டில் வசித்து வருகிறார். யார் அவர்? ஏன்?

அவர் இந்தி நடிகர் அனுபம் கெர். அதற்கான விளக்கத்தை அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் யாருக்காக வீடு வாங்க வேண்டும், வீடு வாங்க ஒதுக்கியுள்ள பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை வாடகையாக கொடுத்து ஒரு வீட்டில் வசிப்பதுதான் சிறந்த முடிவு எனக் கருதுகிறேன்.

“வீடு வாங்குவதைவிட பணத்தைச் சேமிப்பதுதான் நல்லது என்பது என் கருத்து. சொந்த வீடு வாங்குவதற்குப் பதிலாக அந்த பணத்தைக் சமூக சேவைகளுக்காகவோ மற்ற அர்த்தமுள்ள விஷயங்களுக்காகவோ செலவிடலாம்.

“அப்போதுதான் மக்கள் நம் மறைவுக்குப் பிறகும் நம்மை நினைவில் வைத்திருப்பார்கள்,” என்கிறார் இந்தி நடிகர் அனுபம் கெர்.

தாம் சொந்த வீடு வாங்காவிட்டாலும் தன் தாயாருக்காக எட்டு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீட்டை வாங்கித் தந்துள்ளார் அனுபம் கெர்.

குறிப்புச் சொற்கள்