நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார் பிந்து மாதவி.
இப்படத்திற்கு ‘தண்டோரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. முரளிகாந்த் இயக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் பிந்து மாதவி.
அவரது முதல் தோற்றச் சுவரொட்டியை இப்படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டுள்ளனர். கதைப்படி அவரது பாத்திரத்தின் பெயர் ஸ்ரீலதா. இப்படத்தில் பிந்து மாதவியுடன் நவ்தீப், நந்து, ரவி கிருஷ்ணா, மாணிகா மவுனிகா ரெட்டி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிந்து மாதவி, தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார்.
தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்குப் பட உலகிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார்.

