‘வாழை’ படத்துக்குப் பிறகு, துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ படத்தை இயக்கி முடித்துவிட்டார் மாரி செல்வராஜ். இதில் நாயகியாக நடித்திருப்பவர் அனுபமா பரமேஸ்வரன்.
இயக்குநர் அமீர், பசுபதி, மலையாள நடிகர் லால், ரஜிஷா விஜயன் என பெரிய பட்டாளமே இப்படத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளது.
அநேகமாக எதிர்வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனத் தகவல். இதையடுத்து, குறித்த நேரத்தில் பட வேலைகளை முடிக்கத் திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.
சரி.. என்ன கதை என்று கேட்டால், “துணிச்சலும் நேர்மையும் கொண்ட ஒரு விளையாட்டு வீரனின் ஆழமான கதைதான் ‘பைசன் காளமாடன்’,” என்பதே மாரியின் பதிலாக வருகிறது.
இப்படம் தமது மகனுக்கு தமிழ்த் திரையுலகின் வெற்றிக்கான வாசலைத் திறந்துவிடும் என உறுதியாக நம்புகிறாராம் துருவ்வின் தந்தை விக்ரம்.