உருவகேலி மனத்தைப் புண்படுத்துகிறது: நிவேதா தாமஸ்

1 mins read
da16f428-6866-4bae-9353-bcb845cd8380
நிவேதா தாமஸ். - படம்: ஊடகம்

மெலிந்த உடலுடன் இருந்துவந்த நிவேதா தாமஸ், திடீரென உடல் எடை அதிகரித்துக் காணப்படுகிறார். தைராய்டு பிரச்சினை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உடல் எடை கூடியது குறித்து ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்யும் விதமாக கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

அதேசமயம் உருவகேலி கூடாது என்றும் ரசிகர்களில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதுபற்றி நிவேதா தாமஸ் கூறுகையில், “உருவகேலி என்பது ஒரு பொழுதுபோக்குக்காக சிலர் செய்வதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது எந்த அளவுக்குப் புண்படுத்தும் என்பதை சிலர் உணர்வதில்லை. வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். எனது உடல் நலப் பாதிப்பில் இருந்தும் விடுபட்டு வருவேன் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் உள்ளது. அதனை இழந்துவிட மாட்டேன்,” என்று கூறியுள்ளார் நிவேதா தாமஸ்.

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளாகவும் ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்த நிவேதா தாமஸ், தற்போது தமிழ், மலையாளப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்