புது இயக்குநர் ஒருவருக்கு அவர் இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பே புது கார் பரிசாக கிடைத்துள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘சிறை’ படம் இவ்வாரம் வெளியாகிறது. இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரிக்கு இதுதான் முதல் படம்.
இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகி உள்ளதாம்.
அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு படத்தைத் திரையிட்டு காட்டியுள்ளார் தயாரிப்பாளர் லலித். பார்த்த அனைவருமே படம் அருமை எனப் பாராட்டியுள்ளனர்.
இதனால் மகிழ்ந்து போன லலித், இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரிக்கு படம் வெளியாகும் முன்பே புது கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

