தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் புகாரில் சிக்கிய நடன அமைப்பாளர் ஜானி

1 mins read
73160732-6ce8-4de1-bc50-59dd8d9abe51
விஜய்யுடன் ஜானி. - படம்: ஊடகம்

பிரபல நடன அமைப்பாளர் ஜானி மீது காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் புகாரால் தமிழ், தெலுங்கு திரையுலகங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக உள்ளார் ஜானி. இந்நிலையில் நடனப் பெண் ஒருவர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கிறார்.

மேலும் ஜானியின் மனைவியும் தம்மை தாக்கியதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதை அடுத்து, ஜானியின் மனைவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் அதன் முடிவைப் பொறுத்தே ஜானி கைதாவாரா என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு ஜானி அமைத்த நடன அசைவுகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழ்த் திரையுலகிலும் அவர் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்