அண்மையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் டேவிட் வார்னர் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டது.
“அவர் எந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்?” எனப் பலரும் விசாரித்தபடி இருந்தனர். அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘ராபின்ஹுட்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நடிகர் நித்தின், நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ரவி ஷங்கர் (மைத்ரி மூவி மேக்கர்ஸ்), டேவிட் வார்னர் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
‘ராபின்ஹுட்’ திரைப்படம் இம்மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.