மாரி செல்வராஜைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர்

மாரி செல்வராஜைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர்

படங்கள்: ஊடகம்

29 Nov 2025 - 2:52 pm

1 mins read

மாரி செல்வராஜ் இயக்கத்தில், அண்மையில் வெளியான ‘பைசன்’ திரைப்படம், பரவலாகப் பலரது பாராட்டுகளைப் பெற்றது.

அந்தப் பட்டியலில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

இவர் சில நாள்களுக்கு முன்பு ‘பைசன்’ படத்தைப் பாராட்டியுள்ளார். இதையடுத்து, சூட்டோடு சூடாகப் படம் குறித்த தனது கருத்தைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாரி செல்வராஜ், பட நாயகன் துருவ் விக்ரமைப் பாராட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

“படம் மிகச் சிறப்பாக இருந்தது. மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த திரைப்பட இயக்குநர். அவரது படைப்புகள் அழுத்தமானதாகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.

“துருவ் இந்தப் படத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். அதற்காக அவர் கடின உழைப்பைத் தந்துள்ளார்.

“துணை கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் பங்கை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் மேலும் பல வெற்றிகள் கிடைக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்கிரிக்கெட்பாராட்டு