சென்னை: 200 கோடி ரூபாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது பெரிது என்றால் தம்மிடம் ரூ.2,000 கோடி பேரம் பேசியதைக் கைகழுவிவிட்டு, தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடப்பிதழ் முடக்கப்பட்டதால் உலக நாடுகளுக்குச் செல்லமுடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“வியர்க்காமல் விளையாட முடியாது, விமர்சனம் இல்லாமல் வளர முடியாது. விமர்சனத்தைத் தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது,” என்றார் சீமான்.

