தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நனவாகாமல் போன ராணுவக் கனவு; மாதவனுக்குக் கைகொடுத்த சினிமா

2 mins read
352d25a7-d983-4269-bd47-91adab0f042d
நடிகர் மாதவன். - படம்: ஊடகம்

நடிகர் ஆர். மாதவன் ஆறு மாதம் வயது அதிகமாகிவிட்டதால் ராணுவ அதிகாரி ஆக வேண்டிய ஆசையை விட்டுவிட்டு நடிகராகி இருக்கிறார்.

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தமது 55வது பிறந்தநாளைக் கொண்டாடிய மாதவனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

1970ஆம் ஆண்டு ஜம்ஷெட்பூரில் பிறந்த இவர், ஆரம்பத்தில் இந்திப் படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார்.

மாதவன் நடிகராக மட்டுமின்றி கடந்த 2023ல் வெளிவந்த ‘ராக்கெட்ரி’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இப்படத்தை இயக்கியதோடு அதில் நாயகனாகவும் நடித்திருந்தார் மாதவன்.

அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம். மாதவனின் 22வது வயதில் மகாராஷ்டிராவில் சிறந்த என்சிசி வீரராக விளங்கினார். இதனால் அவருக்கு பிரிட்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரிட்டன் சென்று அங்குள்ள ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார். இதையடுத்து ராணுவத்தில் சேர மாதவன் முடிவு செய்தார்.

ஆனால், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பில் ஆறு மாதம் அதிகமாகிவிட்டதால், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற மாதவனின் கனவு நனவாகாமல் போய்விட்டது. அதன் பிறகு மும்பையில் முதுகலைப்பட்டம் படித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மாதவன் மும்பையில் மாடலிங் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பிறகு இந்தி நாடகத் தொடர்களில் நடித்தார். இதன்மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.

1996ம் ஆண்டு தனது முதல் இந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2000ம் ஆண்டு ‘அலைபாயுதே’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம்தான் அவருக்குச் சாக்லேட் பாய் இமேஜ் கிடைத்தது.

நடப்பு ஆண்டில் இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மூன்றாவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மாதவன் சம்பளம்

கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான் இணையத் தொடருக்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த 15-16 ஆண்டுகளில் மாதவனின் சம்பளம் எதிர்பாராத விதமாக 1468 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர் ஆண்டிற்கு ரூ.12 முதல் 15 கோடி வரை சம்பாதிக்கிறார்.

மாதவன் சொத்து மதிப்பு

நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.115 கோடி இருக்குமாம். கதை பிடித்திருந்தால் மட்டுமே அவர் படங்களில் நடிப்பார்.

நடிகர் மாதவனுக்கு பைக்மீதும் ஆர்வம் அதிகம். அவர் ஏராளமான விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி வைத்திருக்கிறார்.

அவரிடம் இருக்கும் கார்களைவிட பைக்குகள்தான் அதிகம்.

குறிப்புச் சொற்கள்