தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபிகா வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டார்

1 mins read
a25ded5c-4253-4b6b-b0aa-833ccc5bd524
 தீபிகா படுகோன். - படம்: ஊடகம்

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை அடுத்து, ‘கபீர் சிங்’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கிய பிறகு நாடறிந்த இயக்குநர் ஆகிவிட்டார் சந்தீப் ரெட்டி வங்கா.

தற்போது ‘பாகுபலி’ பிரபாஸ் நாயகனாக நடிக்க, ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், இயக்குநருடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவர் திடீரென படத்தில் இருந்து விலகியதாகப் பின்னர் கூறப்பட்டது.

இதனால் இயக்குநர் சந்தீப்பை சமூக ஊடகங்களில் தீபிகா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், தீபிகா இப்படத்தில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாகவும் அதன் காரணமாகவே, அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் புதுத்தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு தீபிகா தாய்மை அடைந்தார். அதனால்தான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்தாராம். மேலும், ரூ.20 கோடி ஊதியம் பேசப்பட்ட நிலையில், படத்தின் லாபத்திலும் அவர் பங்கு கேட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் அவர் மீது இயக்குநருக்கு கோபம் ஏற்படவே, படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று இந்தி திரை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்