தீபிகா படுகோன் ராசியான நடிகை: அட்லீ

தீபிகா படுகோன் ராசியான நடிகை: அட்லீ

1 mins read
7ca28e3e-104d-4cc6-af93-84200e709b4f
அட்லீ, தீபிகா படுகோன். - படம்: ஹங்காமா எக்ஸ்பிரஸ்

நடிகை தீபிகா படுகோன் மிக ராசியான நடிகை என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறார் இயக்குநர் அட்லீ.

இந்தியில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கிய இவர், தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப் படத்தை பெரும் பொருள் செலவில் இயக்கி வருகிறார்.

‘ஜவான்’ படத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோன், இந்த தெலுங்குப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

“முன்பு ‘ஜவான்’ படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. மேலும், ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன் காரணமாகவே அல்லு அர்ஜுன் படத்திலும் தீபிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் எனக்கு ராசியான நாயகியாகிவிட்டார்.

“இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அவர் திரையில் தோன்றுவார்,” என்று விளக்கம் அளித்துள்ளார் அட்லீ.

குறிப்புச் சொற்கள்