இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இருந்து நடிப்புப் பக்கம் சென்றுள்ளார்.
தெலுங்கில் வேணு இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ என்ற படத்தில் இவர்தான் கதாநாயகன் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தெலுங்கு நாயகர்கள் நானி, நிதின், சர்வானந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
இதையடுத்து, தேவிஸ்ரீ பிரசாத்தை நாயகனாக அறிமுகப்படுத்த இயக்குநர் வேணுவும் தயாரிப்புத்தரப்பும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

