பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல்.ராய், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘தேரே இஷ்க் மே’ இந்திப் படம் பெரும் வெற்றி பெற்றது.
தனுசுக்கு ஜோடியாக இந்தி நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ள இப்படம், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கண்டு தயாரிப்பாளரின் பையை நிரப்பியதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் ஆனந்த்.எல். ராயும் தனுசும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். இந்த முறை அதிக பொருள் செலவில் சண்டை, காதல் காட்சிகள் நிறைந்த காதல் படத்தை உருவாக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
ஏற்கெனவே ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

