இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், தியாகராஜன் குமார ராஜா ஆகியோர் கலந்துகொண்டு இப்படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் இப்படத்துக்கு திரைக்கதை எழுதுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு வேறு எந்தத் தகவலும் இல்லை.
2024ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பு தொடங்கும் என்றனர். ஆனால் 2026ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட பிறகும், எந்தப் புதுத் தகவலும் இல்லை. இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் சில காரணங்களால் திடீரென விலகிவிட்டதாம்.
தனுஷும் அடுத்தடுத்து வேறு படங்களில் ஒப்பந்தமாகி, அவற்றில் நடித்தும் வருகிறார்.
இந்த ஆண்டாவது படத்தின் அடுத்தகட்டப் பணிகள் தொடங்குமா? படப்பிடிப்பு நடக்குமா? என இளையராஜா, தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

