தமிழ்ச் சினிமாவின் முன்னணி நாயகர்களில், தற்போது அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துக்கொண்டிருப்பது தனுஷ்தான்.
சென்னைக்கும் மும்பைக்குமாக விமானத்தில் பறந்துகொண்டே, பல படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் ‘இட்லி கடை’ படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்று திரும்பிய அவர், உடனடியாக மும்பையில் நடைபெறும் இந்திப் படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்றார்.
சென்னையில் இருக்கும்போது ஓய்வு நாள் கிடைத்தால் உடனடியாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதப் பணிகளில் ஈடுபடுகிறாராம்.
போயஸ் தோட்டத்தில் புது வீடு கட்டி வசிக்கத் தொடங்கிய பிறகு, ஓயாமல் படப்பிடிப்பில் பங்கேற்றபடி இருக்கிறார் தனுஷ்.
அந்த வகையில், இந்தப் புதிய வீடு தமக்கு மிகவும் ராசியாக உள்ளதாக நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம்.