தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ்

1 mins read
292200d7-d225-4d3c-a1a9-7e75cc0e17a4
 ‘கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா’ படத்தில் முதல் தோற்றச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ‘கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் தனுஷ் கதை நாயகனாக நடிக்க உள்ளார்.

அபிஷேக் அகர்வால், அனில் சுங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்க உள்ளார். இதற்கு முன்னர் இவர் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கியவர்.

கலாம் படத்தின் சுவரொட்டியை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிந்துள்ளார் ராவத்.

மேலும், தமது பதிவில், “ராமேசுவரத்தில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை ஒரு புராணக்கதையின் பயணம் தொடங்குகிறது. இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார். இது பெருங்கனவு,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.50 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்