தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனுஷ் ஜோடியாக கிரித்தி

1 mins read
a4f68d39-622c-4c3a-9a5c-4e1661933a58
கிருத்தி சனோன். - படம்: ஊடகம்

தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படத்துக்கு ‘தேரே இஷ்க் மே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தனு‌ஷின் ஜோடியாக கிரித்தி சனோன் நடிப்பதாக படக்குழு அண்மையில் அறிவித்துள்ளது.

பல மாதங்களுக்கு முன்பே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில், முன்தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இப்படம் எதிர்வரும் நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்