‘சிக்ஸ்பேக்’ நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா

‘சிக்ஸ்பேக்’ நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா

1 mins read
5e8cd7e9-1541-4349-ad47-3959f4b16d59
தமது மூத்த மகன் யாத்ராவுடன் தனுஷ். - படம்: தினமணி

நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளிலும் சாதித்து வரும் நிலையில், தற்போது அவரது மூத்த மகன் யாத்ராவும் திரைத்துறையில் கால் பதிக்க உள்ளார்.

விரைவில் ஒரு புதிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக யாத்ரா அறிமுகமாகவுள்ளார்.

இதற்காக யாத்ரா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு ‘சிக்ஸ்பேக்’ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை நடிகர் தனுஷ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனுஷ், தற்போது இயக்கி, நடித்துள்ள ‘கர’ திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வாரிசு நடிகராகத் திரையுலகில் நுழையும் யாத்ராவுக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்