மீண்டும் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இயக்குநர் அட்லீ. இவரது இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ இந்திப் படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த ஷாருக்கானின் சந்தை மதிப்பை தூக்கி நிறுத்தியது இந்தப் படம். இதனால் ஷாருக்கானும் அவரது நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்களும் அட்லீ மீது மரியாதை வைத்துள்ளனர்.
தற்போது அல்லு அர்ஜுனை வைத்துப் படம் இயக்கி வரும் ,அட்லீ அடுத்து ஷாருக்கானை வைத்துப் படம் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அது ‘டான்’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்கக்கூடும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அமித்தாப் பச்சன் கடந்த 1978ல் ‘டான்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் 2006ஆம் ஆண்டு ‘டான்’ இரண்டாம் பாகத்தில் நடித்தார் ஷாருக்கான்.
‘டான்’ முதல் பாகம் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் மறுபதிப்பானது. அதேபோல் ‘டான்’ இரண்டாம் பாகம், அஜித் நடிப்பில் ‘பில்லா-2’ ஆக மறுபதிப்பு செய்யப்பட்டது.
தற்போது அட்லீ இயக்கத்தில் ‘டான்-3’ ல் நடிக்க விரும்புகிறாராம் ஷாருக் இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

