இயக்குநர் சங்கரின் மகள் தெலுங்கு மொழியில் அறிமுகமாகிறார். இப்படத்துக்கு ‘பைரவம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் சாய் ஸ்ரீநிவாஸ், நாரா ரோகித், மனோஜ் மஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
விஜய் கனக மேடலா இயக்குகிறார். இதில் அதிதி ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலா. படம் முழுவதும் கிராமத்து இளம் பெண்ணாகத் திரையில் வலம் வருவாராம்.
பாவாடை, தாவணி அணிந்து இருசக்கர வாகனத்தில் அவர் கிராமத்தை வலம் வரும் காட்சிகளை அண்மையில் படமாக்கியுள்ளனர். அதிதியின் கிராமத்து தோற்றத்தைப் பார்த்த தந்தை சங்கரும், தன் மகள் அழகாக இருப்பதாகப் பாராட்டினாராம்.
தமிழில் ‘விருமன்’, ‘மாவீரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அதிதி. இந்தப்படம் விரைவில் திரை காண உள்ளது.