‘கங்குவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரபல இந்தி நடிகை திஷா பதானி. மேலும் பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ‘டுராங்கோ’ என்ற இணையத்தொடரில் நடிக்கிறாராம் திஷா. இதற்கான படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது ஹாலிவுட் கலைஞர்களுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இத்தொடரில் நடிக்க அவருக்குப் பெரும்தொகை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
ஹாலிவுட் படங்களில் நடித்து அங்கு தற்போது உருவாகும் இணையத்தொடர்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் வரிசையில் திஷா பதானியும் இணைந்துள்ளார்.
இதற்கிடையே, ‘கங்குவா’ படத்தின் வசூல் தோல்வியால் கவலையில் இருந்த திஷா, இப்போது உற்சாகமாகி உள்ளார்.
இளம் முன்னணி நாயகருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் தாம் நடிக்கும் அடுத்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறாராம் திஷா பதானி.