அண்மையில் நடிகை வித்யா பாலனின் காணொளி என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வலம் வந்த ‘டீப் ஃபேக்’ காணொளியை நம்ப வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் தாம் இடம்பெற்றிருப்பது போல் ஒரு காணொளி பரவி வருவதாகவும் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
“அக்காணொளியின் உருவாக்கம், அதைப் பரப்புவதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை.
“காணொளியில் கூறப்படும் எந்தக் கருத்துக்கும் நான் காரணமல்ல. இதுபோன்ற காணொளிகளைப் பகிர்வதற்கு முன்பு, ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.