இந்தியிலும் ‘டிராகன்’

1 mins read
9e2f1c59-a1a0-47ba-8517-d6967d2e606e
‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன். - காணொளிப் படம்: திங்க் மியூசிக் இந்தியா / யூடியூப்

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘டிராகன்’ வெளியாகி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் படத்திற்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு உள்ளது ‘டிராகன்’ மோகம்.

இந்தப் படம் வெளியாகி 10 நாள்களில் ரூ 100 கோடியை உலகளவில் வசூலித்துள்ளது.

‘டிராகன்’ படத்துக்கான வசூல் வரும் வாரங்களில் ரூ 150 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் இந்தி மொழியிலும் வெளியாகவிருப்பதை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ‘டிராகன்’ படத்தின் இந்திப் பதிப்பு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘டிராகன்’ இந்திப் பதிப்பு வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழைப் போன்றே இந்தப் படம் இந்தி மொழியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇந்தி