தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டூட்’ சுவரொட்டி வெளியீடு; தீபாவளி வெளியீட்டுக்கு அதிக போட்டி

1 mins read
bafaa30f-468f-4b01-876b-a1dde4a1c032
‘டூட்’ படத்தின் புதிய சுவரொட்டி. - படம்: ஊடகம்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

இப்படத்திற்கு டூட் (dude) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் நிலையில், புதிய சுவரொட்டியைத் திங்களன்று (மே 12) வெளியிட்டுள்ளனர்.

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன.

முக்கியமாக, நடிகர் சூர்யாவின் 45வது படம், மாரி செல்வராஜின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே, டூட் ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்