மோகன் லாலை அடுத்து, மற்றொரு மூத்த நடிகரான சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மாளவிகா மோகனன்.
‘தங்கலான்’ படத்தை அடுத்து, மோகன் லாலுக்கு ஜோடியாக ‘ஹ்ருதயபூர்வம்’ மலையாளப் படத்தில் நடித்தார் மாளவிகா.
இந்நிலையில், தற்போது தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகி உள்ளார்.
தற்போது சிரஞ்சீவியுடன் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஏற்கெனவே நடிகை திரிஷா, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ என்ற படத்தில் இணைந்தார்.
இந்தப் படங்களை அடுத்து, ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கிய பாபியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிரஞ்சீவி. அந்தப் படத்துக்குத்தான் மாளவிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
மோகன் லால், மாளவிகா இணைந்து நடித்தபோது, 65 வயது நடிகருக்கு ஜோடியாக 32 வயது பெண் என்று சமூக ஊடகங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாத மாளவிகா, கேலி செய்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது 70 வயதான சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.